இந்து அமெரிக்கன் திருத்தலம் மற்றும் பாரம்பரிய மையம் என்று கூறப்படுகின்ற குருவாயூரப்பன் திருத்தலம் அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் எண் 31, ஊல்லிடவுன் சாலை, மோர்கன்விலே என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ஸ்ரீ குருவாயூரப்பன் திருத்தலம் என்றும். ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என்றும் மறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. எவ்வித இலாப நோக்கம் இன்றி,ன்றி செயல்படும் இத்தலம், இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் விதத்தில் பிரதிபலிக்கின்றது. திருத்தலத்தில் நுழைவதற்கு முன்பாகவே பரந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் கொடி மரத்தினை கண்டு வணங்கிச் செல்லலாம். நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதிகள் உள்ளன. மிகுந்த உயரத்தில் அமைந்திருக்கும் இத்தலத்திற்கு அதிக படிகட்டுகளில் ஏறி செல்ல வகை செய்துள்ளனர
திருத்தலத்தில் நுழைந்ததும் இடப்புறம் மீனாட்சி திருக்கல்யாண கோலக் காட்சியினையும், வலப்புறத்தில் சீனிவாச பெருமாளின் திருக்கல்யாணக் கோலக் காட்சியினையும் கண்டு மகிழ்ந்திடலாம். உள் வளாகத்தில் ‘பஞ்சயாத்தனா’ என்ற பெயரில் அமைந்துள்ள ஒரு பீடத்தில் வினாயகர்,சிவன்,நந்தி ஆகியவர்களை வணங்கிடலாம்.
இத்தலத்தில் முக்கிய மூலவராக அருள்பாலிப்பவர் அருள்மிகு குருவாயூரப்பன் ஆகும். அருள்மிகு தெய்வங்கள் வெங்கடேசப் பெருமாள்,மகாலட்சுமி,அய்யப்பன் சத்ய நாரயணர், ஆகியவர்களுக்கு பிரத்தியோக சன்னதிகள் அமைந்துள்ளன.
வெங்கடேசப் பெருமாளை வணங்கி விட்டு வலம் போது, மத்யஸ்யா, இலட்சுமி, ஹயகிரிவர், கூர்மா, வராக, இலட்சுமிநரசிம்மர், வாமனர். இலட்சுமி நாராயணர், பரசுராமர், இராமர், பலராமர், கிருஷ்ணர், தன்வந்திரி, கல்கி ஆகியவர்களின் மூர்த்திகளை கண்டு வணங்கிடலாம். திருப்பதி சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தனிசன்னதியில் அருள்பாலிக்கும் காட்சி ஒரு கண் கொள்ளாக்காட்சியாகும். வைணவ தலத்திற்கேற்றவாறு பெருமாளுக்கு எதிரில் கருடாழ்வாரைக் கண்டு வணங்கிடலாம். இதன் அருகில் மிகப் பெரிய துலாபாரம் அமைந்துள்ளது. திருப்பதியில் காணப்படுவது போல் பிரத்தியோக உண்டியல் அமைப்பும் உள்ளது.
குருவாயுரப்பனை தரிசித்து விட்டு வலம் வரும் போது, கோவர்த்தனகிரிதாரி, திரிவிக்ரம், கஜேந்திர மோட்சம், வேணுகோபாலன், இராத கிருஷ்ணர், மகாவிஷ்ணு, தன்வந்தரி, ஹரிஹர மூர்த்தி ஆகியவர்களை வணங்கிச் செல்லலாம்.
மேலும் தனிதனி சன்னதிகளில் கன்யாகா பரமேஸ்வரி, துர்கா, காயத்திரி, சிவகாமி சமேத நடராஜர், மகாகணபதி, வள்ளி சுப்பிரமணியர் தேவசேனா, பத்ராசல சீதா இராமர், இலட்சுமணர், இராதே கிருஷ்ணர், ஆண்டாள், அன்னாவர சுவாமிகள், ஹனுமன், கால பைரவர், நவகிரகம் ஆகிய அருள்மிகு தெய்வங்களை வணங்கிச் செல்ல மூர்த்திகள் உள்ளன.
எம்பெருமான் சிவனை வணங்கி விட்டு வலம் வரும் போது கங்காதர மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, காலசம்ஹார மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டி கேஸ்வரர், அஷ்டபுஜ விஜய துர்கை, சிவனின் ருத்திர தாண்டவம், சிவதாண்டவம் போன்ற மூர்த்திகளை கண்டு வணங்கிடலாம். அன்னை அம்பிகா சிவன் சன்னதிக்கு அருகில் தனி சன்னதியில் இருந்து பக்தர்களை அருள் பாலிக்கின்றாள்.
திருத்தலத்தின் பிரகாரத்தை வலம் வரும் போது சுவர்களில் பகவத்கீதை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளதை படித்து மகிழலாம். திருத்தலத்தின் கீழ்பகுதியில் உள்ள பகுதியில் கலை அரங்கமும்.பிரசாதம் கொடுக்கும் இடமும் அமைந்துள்ளது.
1988 ஆம் ஆண்டு முதல் செயல்படும் இத்தலம், 29 ஏக்கருக்கும் அதிகமான இடத்தினை கொண்டு திகழ்கின்றது. 2012 ஆம் ஆண்டு கும்பாபிசேகம் நடைபெற்ற இத்தலத்தில் கோசாலை என்று கூறப்படுகின்ற பசுமடமும், போஜன சாலை, யாகசாலை, மற்றும் குருக்களுக்குரிய தங்கும் விடுதிகளுடன் இத்தலம் திகழ்கின்றது. இதற்கு முன் ஏற்கெனவே இங்கு இருந்த பழைய கோவில், தற்போது ‘சரஸ்வதி வித்தியாலாயா’ என்ற பெயரில் கல்வி கூடமாகத் திகழ்கின்றது. இந்த கல்வி கூடத்தில் சமஸ்கிருதம், யோகாசனம், தியானம், நடனம், இசை போன்ற வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றது. இங்கு ஆண்டு முழுவதும் இந்தியாவின் அனைத்து மாநிலத்தின் பாரம்பரியத்திற்குத் தகுந்தவாறு ஆன்மிக சம்பந்தப்பட்ட விழாக்கள் நடத்தப்படுகின்றன. திருத்தலத்தின் கீழ்பகுதியில் கலை அரங்கம் அமைந்துள்ளது. கீழ்தளத்தின் முன்பகுதியில் பிரசாதம் வழங்கப்படுகின்றது. தலத்தின் நடை திறந்திருக்கும் நேரம் வார நாட்களில் காலை 08.30 முதல் 11.30 வரை. மாலை 16.30 முதல் 20.30 வரை. சனி ஞாயிறு போன்ற நாட்களில் காலை 08.30 முதல் மாலை 20.30 வரை திறந்திருக்கும். திருத்தலம் பற்றி மேலும் தகவல் அறிந்து கொள்ள அணுக வேண்டிய கையகப்பேசி எண் 732 972 5552 திருத்தலம் பற்றி மேலும் செய்திகள் அறிந்து கொள்ள அணுக வேண்டிய கையகப்பேசி எண் 732 972 5552.

No comments:
Post a Comment