Please Click the link & get 2000 Rs instantly

Friday 29 June 2018

MBBS/BDS Counselling 2018 Latest Update| Certificate Verification|Counse...

Tamil Nadu MBBS Counselling 2018

Tamil Nadu MBBS Counselling 2018 – Important Dates
Events
Important Dates
Declaration of merit list
June 28, 2018 (RELEASED)
Exercising of options
July 1, 2018
First Round of Counselling (Government Quota seats)
July 1 - July 5, 2018
First Round of Counselling (Management Quota seats)
July 7 - July 10, 2018
Second Round of Counselling (Government Quota seats)
July 16 - July 21, 2018
Second Round of Counselling (Management Quota seats)
July 22 - July 24, 2018
Tamil Nadu MBBS BDS Counselling 2018 – Highlights
  • Tamil Nadu MBBS 2018 counselling will be held in offline mode.
  • The counselling will most likely be held on a separate date for special category candidates.
  • The candidates will be eligible to attend the counselling session for Tamil Nadu MBBS 2018 if they have secured the minimum percentile in the NEET 2018 examination and completed the process of filling up of the application form.
  • The authorities will publish a merit list of the eligible candidates who will be able to attend the Tamil Nadu MBBS counselling 2018.
  • Tamil Nadu MBBS 2018 counselling will take admissions based on the NEET 2018 score and the preference of the candidates while filling up the online choices.
Tamil Nadu NEET MBBS BDS Counselling 2018 – Procedure
  • The candidates have to attend the document verification procedure of Tamil Nadu MBBS admission 2018.
  • The candidates, after getting their documents verified will be required to go through the online choice filling procedure for Tamil Nadu MBBS 2018.
  • Candidates must fill in the number of colleges according to the order of preference.
  • Candidates after the process of online choice filling can download their call letters before appearing for the Tamil Nadu MBBS BDS counselling 2018 at the designated centres.
  • The call letters can be downloaded from the official link of Tamil Nadu MBBS admission 2018. The candidates must carry the call letters to their designated counselling centres and allotted colleges for verification purposes.
  • An SMS or an email is sent to the candidates’ registered mobile numbers and e-mail ids for attending the counselling process for Tamil Nadu MBBS 2018.
  • The candidates attending Tamil Nadu MBBS BDS counselling 2018 are also required to carry the required documents in original and in copies for the process of taking provisional admission after completion of the counselling process.

Document Required for Tamil Nadu MBBS BDS Counselling 2018 - State Quota seats

  • 10th and 12th certificates and mark sheets
  • NEET result/score card
  • Bonafide certificate of having studied from Class VI to XII from an Institution located in Tamil Nadu.
  • Transfer Certificate
  • Nativity Certificate for candidates who have not studied Class VI to XII from the state.
  • Community Certificate
  • Ration/Card Passport
  • Online application/registration form copy
  • Relationship between the parent and the candidate
Certificate required from the parents to substantiate the native of Tamil Nadu
  • Birth Certificate
  • Class 10 and 12 certificate
  • Degree/Diploma/Professional Course
  • Nativity Certificate
  • Community Certificate
  • Aadhar Card
  • Income Certificate (if applicable)

Document Required for Tamil Nadu MBBS BDS Counselling 2018 - Management Quota seats

  • NEET Admit Card and Score Card
  • Class 10 mark sheet
  • Class 12 marks sheet
  • Transfer Certificate from the Institute last attended
  • Aadhar Certificate
  • Community Certificate
  • Linguistic and Religious Minority Certificate
For NRI candidates
  • NRI status of the financial supporter issued by the Indian Embassy of the respective country under their seal.
  • Declaration of the Parent for the sponsorship.
  • Passport of the candidate and photocopy of the passport of the parent.
  • NRE (Non Resident External) Bank Account Pass Book of the financial supporter.


Tamil Nadu MBBS BDS Counselling 2018 – Seat Matrix
Government Medical College
Government Dental College
Name of College
Total Seats
State Quota
100
85
Private Medical Colleges
Private Dental Colleges

MBBS / BDS : மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவையான ஆவணங்கள்

MBBS / BDS : மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவையான ஆவணங்கள்!
மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. அதற்கு, எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய ஆவணம் குறித்த விபரங்களை, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மொத்தம், 5,757 இடங்கள் உள்ளன. இதற்கான தர வரிசையில், 44 ஆயிரத்து, 332 பேர் இடம் பெற்றுள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்கி, 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்போர், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் விவரம்:

* நீட் தேர்வு நுழைவு சீட்டு மற்றும் மதிப்பெண் அட்டை, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்

* கடைசியாக படித்த பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் அல்லது தற்போது படித்து வரும் நிறுவனத்தின், 'போனோபைடு' சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

* இருப்பிட; ஜாதி சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பெற்றோருக்கும், மாணவருக்குமான உறவை குறிப்பிடும் ஆவணம் மற்றும் தேவைப்படுவோருக்கு, முதல் பட்டதாரி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

* தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், வேறு மாநிலங்களில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்திருந்தால், கட்டாயம் இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

* மாணவரின் பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான, ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர் தேர்வு குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல் கட்டாயம் எடுத்து வர வேண்டும். அசல் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டு, திரும்ப கொடுக்கப்படும்; நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி இல்லை.போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிப்பதை தடுக்க, விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. பெற்றோருக்கும், மாணவருக்குமான உறவை குறிப்பிட, தங்களிடம் உள்ள ரேஷன் கார்டு போன்ற, ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

BE - 2ம் ஆண்டு சேர்க்கை இன்று கவுன்சிலிங் தொடக்கம்

BE - 2ம் ஆண்டு சேர்க்கை இன்று கவுன்சிலிங் தொடக்கம்!
பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 89 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.பாலிடெக்னிக், பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரியில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.


514 கல்லுாரிகளிலிருந்து இதுவரை 89 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 11,164 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

இதனால், விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது. காலை 9:00 மணிக்கு மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினருக்கும், அதை தொடர்ந்து லெதர், பிரின்டிங் பிரிவுக்கும், மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை கெமிக்கல், 3:00 மணி முதல் 4:30 மணி வரை டெக்ஸ்டைல் பிரிவுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.

இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறியது: கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்றனர்.

Flash News குரூப் -2 (Interview posts)


Flash News குரூப் -2 (Interview posts) தேர்விற்க்கான அறிவிப்பு நாளை வெளியாகலாம்!!
 குரூப் -2 (Interview posts) தேர்விற்க்கான அறிவிப்பு நாளை வெளியிடப்படலாம் என தகவல்

Notification -29.06.2018
Exam -  07.10.2018
Last date - 03.08.2018
Vaccancy - 2312**

Thursday 28 June 2018

TNEA Online Couselling Latest Update 2018|Ranking Published|Choice Entry...

BE - படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

 BE - படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 10ல் தொடங்குகிறது!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்
 பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 10ல் தொடங்குகிறது என்றும் 5,397 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும் கே.பி.அன்பழகன்  தெரிவித்தார்.

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கை கலந்தாய்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 3ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை முடிந்தது. இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு 1,59,631 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை 42 இணைய சேவை மையங்களில் ஜூன் 15ம் தேதி 17ம் தேதி அண்ணா பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த மையத்திலும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கும் பணி நடந்தது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களின் 49,781 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு இணையவழி கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் அண்ணா பல்கலைகழகத்தில் இன்று தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உயர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்  பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 10ல் தொடங்குகிறது என்றும் 5,397 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும் கே.பி.அன்பழகன்  தெரிவித்தார். இதற்கு பின்பு பேட்டி அளித்த அவர்,பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசையில் கீர்த்தனா ரவி முதலிடமும், ரித்விக் 2ம் இடமும், ஸ்ரீவர்ஷினி 3ம் இடமும் பிடித்துள்ளதாக தெரிவித்த அவர், முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் கலந்தாய்வில் 1 லட்சத்து 4,453 மாணவர்கள் பங்கேற்க உள்ளதாகவும், மருத்துவ கலந்தாய்வு முடிந்த பின் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜூலை 1 -10ம் தேதி வரை மருத்துவ கவுன்சில் நடைபெறும் என் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால், ஜூலை 10ம் தேதிக்கு பின்னரே கலந்தாய்வு தொடங்கும் என்று அன்பழகன் உறுதிப்பட தெரிவித்தார். மேலும் சான்றிதழ் சரிப்பரப்பின் போது நிராகரிக்கப்பட்ட 5,800 பேரும் மீண்டும் அணுகலாம் என்று குறிப்பிட்ட அவர், பொறியியல் சேர்க்கைக்கான செயலரை அணுகி உரிய சான்றிதழ்களை அளிக்கலாம் என்றும் ஜூலை 30ம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வை முடிக்க முடியாது என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகுகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அன்பழகன் கூறியதாவது: எவ்வித குளறுபடியும் இல்லாமல் சரியான முறையில் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாக தர வரிசை அனுப்பப்படும். நடப்பாண்டில் 26 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தாண்டு பொறியியல் கல்விக் கட்டணத்தில் மாற்றமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday 27 June 2018

125 Rs Coin Released | ரூ.125 நாணயம் 29.06.2018 அன்று (நாளை) வெளியீடு-In...

ரூ.125 நாணயம் 29.06.2018 அன்று வெளியீடு!

ரூ.125 நாணயம் 29.06.2018 அன்று வெளியீடு!

 

புள்ளியியல் தினத்தையொட்டி, ரூ.125 நாணயத்தை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு நாளைய  (ஜூன் 29) வெளியிடவுள்ளார்

இதையொட்டி, கொல்கத்தாவில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் துறைற அமைச்சகம் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் புள்ளியியல் தின நினைவு ரூ.125 நாணயம், ரூ.5 புதிய நாணயம் ஆகியவற்றை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெளியிடவுள்ளார்.

Tuesday 26 June 2018

TNEA 2018 Latest Update | BE - கவுன்சிலிங் நாளை தரவரிசை| DD Acceptance

BE - கவுன்சிலிங் நாளை தரவரிசை!


இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. இதில், 1.08 லட்சம் பேருக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை எண் வழங்கப்படும்.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டில் இருந்து, 'ஆன்லைன்' கவுன்சிலிங் அமலுக்கு வருகிறது. இந்த கவுன்சிலிங், ஜூலை முதல் வாரத்தில் துவங்க உள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து, 1.08 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.விண்ணப்பித்த மாணவர்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் இன ரீதியான இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை எண் வழங்கப்படுகிறது.

இதற்கான தரவரிசை பட்டியல், நாளை காலை, 8:30 மணிக்கு வெளியிடப்படுகிறது.சென்னை, அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், பட்டியலை வெளியிடுகிறார்.கவுன்சிலிங் எப்போது நடக்கும், ஆன்லைனில் விருப்ப பாடத்தை பதிவு செய்வது எப்போது, என்ற விபரங்களும் நாளை வெளியிடப்படுகிறது.

BE - கலந்தாய்வு கட்டணத்தை டிடி மூலமாகவும் ஏற்க அண்ணா பல்கலை.,-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.