இன்ஜினியரிங்
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல், நாளை
வெளியிடப்படுகிறது. இதில், 1.08 லட்சம் பேருக்கு, பிளஸ்
2 மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை எண் வழங்கப்படும்.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு,
அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டில் இருந்து,
'ஆன்லைன்' கவுன்சிலிங் அமலுக்கு வருகிறது. இந்த கவுன்சிலிங், ஜூலை
முதல் வாரத்தில் துவங்க உள்ளது.கவுன்சிலிங்கில்
பங்கேற்க, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து, 1.08 லட்சம் பேர் தகுதி
பெற்றுள்ளனர்.விண்ணப்பித்த மாணவர்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் மற்றும்
இன ரீதியான இட ஒதுக்கீடு
அடிப்படையில், தரவரிசை எண் வழங்கப்படுகிறது.
இதற்கான
தரவரிசை பட்டியல், நாளை காலை, 8:30 மணிக்கு
வெளியிடப்படுகிறது.சென்னை, அண்ணா பல்கலையில்
நடக்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், பட்டியலை வெளியிடுகிறார்.கவுன்சிலிங் எப்போது நடக்கும், ஆன்லைனில்
விருப்ப பாடத்தை பதிவு செய்வது
எப்போது, என்ற விபரங்களும் நாளை
வெளியிடப்படுகிறது.
BE - கலந்தாய்வு
கட்டணத்தை டிடி மூலமாகவும் ஏற்க
அண்ணா பல்கலை.,-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
No comments:
Post a Comment