பாலிடெக்னிக், பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக
சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 18 தொடங்கி, ஜூன் 14வரை நடந்தது.
இணையதள முகவரியில் விண்ணப்பித்த மாணவர்கள், அதற்கான
நகல் மற்றும் ரூ.300 வங்கி வரைவோலையை தபாலில் அனுப்பி வைத்தனர். கடந்த
ஆண்டு 13 ஆயிரத்து 69 பேர் விண்ணப்பித்தனர். நடப்பாண்டில் ஒரு லட்சம்
மாணவர்கள்சேர்க்க இடங்கள் உள்ளன. ஆனால், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10
சதவீத அளவிலேயே உள்ளது.
நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறியது: ஆன்லைனில் 12 ஆயிரத்து 21 பேர் விண்ணப்பித்துள்ளனர். தபாலில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கவுன்சிலிங் இந்த மாத கடைசியில் இருக்க வாய்ப்பு உள்ளது. தபாலில் விண்ணப்பங்கள் பெறப்பட்டதற்கான ஒப்புகை விண்ணப்பதாரர்களின் இ மெயிலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மாணவர்கள் இமெயிலிலிருந்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம், என்றார்.

No comments:
Post a Comment