B.Ed - மாணவர்
சேர்க்கை விண்ணப்பம் நாளை கிடைக்கும்
அரசு மற்றும் அரசு உதவி
பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கான
விண்ணப்ப வினியோகம், நாளை துவங்குகிறது.தமிழக
அரசு, கல்லுாரி கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில்
உள்ள,
14 அரசு
கல்லுாரிகள் மற்றும் ஏழு அரசு
உதவி பெறும் கல்லுாரிகள் என,
21 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., படிப்பிற்கு,
கவுன்சிலிங் வாயிலாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், 1,753 இடங்களுக்கு, இட
ஒதுக்கீட்டு விதிகளின் படி, மதிப்பெண் தரவரிசை
அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கப்படுவர்.இதற்கான கவுன்சிலிங், அடுத்த
மாதம் நடக்க உள்ளது. இதற்கான,
விண்ணப்ப வினியோகம், நாளை துவங்க உள்ளது.
தமிழகம்
முழுவதும், 13 கல்லுாரிகளில்விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. நாளை முதல்,
30ம் தேதி வரை, காலை,
10:00 முதல், பிற்பகல், 3:00 மணி வரை, சனி
மற்றும் ஞாயிறு உட்பட அனைத்து
நாட்களிலும், விண்ணப்பங்களை பெறலாம்.தலித் மற்றும்
பழங்குடியின மாணவர்களுக்கு, 250 ரூபாயும், மற்றவர்களுக்கு, 500 ரூபாயும், விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை பணமாக கொடுத்து, விண்ணப்பம்
பெறலாம். நேரில் மட்டும் விண்ணப்பங்கள்
வழங்கப்படும். தபால் வழியே விண்ணப்பம்
கிடைக்காது என,கல்லுாரி கல்வி
இயக்ககம் அறிவித்துள்ளது.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூலை, 3, மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கிடைக்கும்
இடங்கள், சென்னை - லேடி விலிங்டன் கல்வியியல்
மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை - கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம். குமாரபாளையம், ஒரத்தநாடு, வேலுார் மற்றும் புதுக்கோட்டை
- அரசு கல்வியியல் கல்லுாரி கள்; கோவை - அரசு
மகளிர் கல்வியியல் கல்லுாரி; திண்டுக்கல் காந்திகிராமம் - லட்சுமி கல்வியியல் கல்லுாரி;
சேலம் பேர்லாண்ட்ஸ் - சாரதா கல்வியியல் கல்லுாரி.மதுரை - தியாகராஜர் பர்செப்டார்
கல்லுாரி; துாத்துக்குடி - வ.உ.சி.,
கல்வியியல் கல்லுாரி; பாளையங்கோட்டை - செயின்ட் இக்னேஷியஸ் கல்வியியல் கல்லுாரி; திருவட்டாறு ஆற்றுார் - என்.வி.கே.எஸ்.டி., கல்வியியல்
கல்லுாரி ஆகிய இடங்களில், விண்ணப்பங்கள்
கிடைக்கும்.
No comments:
Post a Comment