Please Click the link & get 2000 Rs instantly

Friday 22 June 2018

BE - பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்


BE - பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்படும் : அண்ணா பல்கலை., அறிவிப்பு

     பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் கலந்தாய்வை நடத்தி வருகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த வந்த பொறியியல் கலந்தாய்வு, நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களின் வசதிக்காக முதன்முதலாக ஆன்லைனில் நடத்தப்படவுள்ளது. பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த மாதம் தொடங்கி முடிந்தது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் கலந்து கொண்டுள்ளன. அதிலுள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ம் தேதி காலை 8.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் இது குறித்த விவரங்கள் மாணவர்களின் கைபேசி எண்ணுக்கும் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.10 லட்சம் பேருக்கான தரவரிசைப் பட்டியல் http://www.tnea.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment