ஆலய வரலாறு : டெக்சாசில் ஹோஸ்டன் பகுதியில் சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்டது அருள்மிகு சிவன் ஆலயம் ஆகும். துவக்கத்தில் சுமார் 4000 சதுரடி நிலப்பரப்பில் சின்மயா மிஷனின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட இக்கோயிலில் பின்னர் 43,000 சதுரடியில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி சுவாமி தேஜேமயானந்தாவால் திறந்து வைக்கப்பட்டது. சிவ பெருமானை முக்கிய தெய்வமாக கொண்டு அமைக்கப்பட்ட இக்கோயில் ஸ்ரீ சவுமியகாசி சிவாலயம் என பெயரிடப்பட்டது. இரண்டு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தின் ஒரு பகுதியில் தெய்வங்களுடனான சிற்பங்களும், மற்றொரு பகுதியில் கோயிலும் தெய்வ சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். சிலையின் பீடத்தில் தண்ணீர் பிரதிபலிக்கும் வகையில் கண்ணாடி போன்ற தளம் முற்றிலும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 13 அடி உயரத்தில் இருக்கும் படி சிவனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தில் மேற்புறம் சிவலிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் மற்றுமொரு தனிச்சிறப்பாகும். கருவறையை மையமாகக் கொண்டு ஆலய பிரகாரங்களும், ஆலயத்தின் எந்த இடத்தில் பார்த்தாலும் ஆகாயம் தெரியும் விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தை சுற்றி அழகிய நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சவுமியகாசி சிவாலயத்தில் சிவன் தவிர ராமர், சீதை, ராதா, கிருஷ்ணர், கணேசர் ஆகிய தெய்வங்களும் நிறுவப்பட்டுள்ளன. பலதரப்பினருக்கும் ஆன்மிக மற்றும் கலாச்சாரத்தை கற்பிக்கும் மையமாக அமைந்துள்ளது. வேதாந்த மற்றும் இந்து கலாச்சாரத்தை இனி வரும் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் பாலமாகவும் இவ்வாலயம் விளங்குகிறது. இவ்வாலயத்தில் ஆன்மிக நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள் மட்டுமின்றி பக்தர்களின் இல்ல வைபவங்களும் நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு பூஜை மற்றும் வேதாந்த முறைகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
Chinmaya Prabha - Chinmaya Mission Houston,
10353 Synott Road,Sugar Land,
Texas 77478-1130, USA.
தொலைப்பேசி : +1-281-568 1690
இணையதளம் : www.saumyakasi.org
No comments:
Post a Comment