Please Click the link & get 2000 Rs instantly

Wednesday, 18 July 2018

இன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்?

இன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்? 21ம் தேதி வெளியாகிறது அறிவிப்பு

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கோரும் வழக்கை, இன்று, உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளதால், பொது கவுன்சிலிங் அறிவிப்பு, 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுஉள்ளது.
சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 509 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, 1.73 லட்சம் இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.தள்ளி வைப்புசிறப்பு பிரிவினர், தொழிற்கல்வி மாணவர்கள், விளையாட்டு பிரிவினர் உள்ளிட்டோருக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் மட்டும், இந்த ஆண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை, 31க்குள், கவுன்சிலிங்கை நடத்தி முடித்து, ஆகஸ்டில் வகுப்புகளை துவங்க வேண்டும்.ஆனால், 'நீட்' தேர்வு பிரச்னையால், மருத்துவ கவுன்சிலிங் நடக்கவில்லை. இதனால், இன்ஜி., பொது பிரிவு கவுன்சிலிங், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கிற்குப்பின் அல்லது ஜூலை, 31க்கு பின், கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாற்றம்
இந்த வழக்கு, ஜூலை, 16ல் விசாரணைக்கு வந்து, நேற்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.நேற்று இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில், கூடுதல் விபரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை, இன்றைக்கு தள்ளி வைத்து உள்ளது.இதனால், பொது பாடப்பிரிவுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பை, வரும், 21ம் தேதிக்கு, இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி மாற்றியுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைத்தால், கவுன்சிலிங் தேதியை நேற்று அறிவிக்கலாம் என, தமிழக அரசு முடிவு செய்திருந்த நிலையில், வழக்கின் விசாரணை தள்ளிப்போனதால், அறிவிப்பு வெளியாகவில்லை.

No comments:

Post a Comment