பொறியியல் படிப்பு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்குகிறது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.
Flash News : BE - ஆகஸ்ட் 31 வரை கவுன்சிலிங் நடத்தலாம்!
அண்ணா பல்கலை கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட்31 வரை பி.இ. கவுன்சிலிங் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 509 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, 1.73 லட்சம் இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை, 31க்குள், கவுன்சிலிங்கை நடத்தி முடித்து, ஆகஸ்டில் வகுப்புகளை துவங்க வேண்டும்.ஆனால், 'நீட்' தேர்வு பிரச்னையால், மருத்துவ கவுன்சிலிங் நடக்கவில்லை. இதனால், இன்ஜி., பொது பிரிவு கவுன்சிலிங், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கிற்குப்பின் அல்லது ஜூலை, 31க்கு பின், கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, ஜூலை, 16ல் விசாரணைக்கு வந்து, 17ல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில், கூடுதல் விபரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை, 18 ல் தள்ளி வைத்து உள்ளது.இதனால், பொது பாடப்பிரிவுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பை நேற்றைக்கு வெளியிட்டது இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி
BE - 3ம் கட்ட கவுன்சிலிங் இன்று முதல் துவக்கம்
இன்ஜியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவினருக்கு, மூன்றாம் கட்ட ஒதுக்கீடு, இன்று துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, இரண்டு விதமான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கும், மற்றவர்களுக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங்கும் நடத்தப்படுகிறது.
ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.
மூன்றாம் கட்ட கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு, 50 காலியிடங்களுக்கு, நாளையும்; விளையாட்டு பிரிவினருக்கு, 150 காலியிடங்களுக்கு, நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, இ - மெயிலில் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment