Please Click the link & get 2000 Rs instantly

Thursday 19 July 2018

BE - 3ம் கட்ட கவுன்சிலிங் நாளை முதல் துவக்கம்/ பி.ஆர்க்., 'ரேண்டம்' எண் வெளியீடு

BE - 3ம் கட்ட கவுன்சிலிங் நாளை முதல் துவக்கம்

இன்ஜியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவினருக்கு, மூன்றாம் கட்ட ஒதுக்கீடு, நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, இரண்டு விதமான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கும், மற்றவர்களுக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங்கும் நடத்தப்படுகிறது.
ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.
மூன்றாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு, 50 காலியிடங்களுக்கு, நாளையும்; விளையாட்டு பிரிவினருக்கு, 150 காலியிடங்களுக்கு, நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, இ - மெயிலில் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையில், நேற்று முன்தினம் துவங்கிய, தொழிற்கல்வி கவுன்சிலிங், இன்று முடிகிறது.

பி.ஆர்க்., 'ரேண்டம்' எண் வெளியீடு
பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு, 'ரேண்டம்' எண் வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட, கட்டட வடிவமைப்பியல் படிப்புக்கான, 'ஆர்கிடெக்' கல்லுாரிகளில், பி.ஆர்க்., பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அண்ணா பல்கலையால் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்கு, கடந்த, 4ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, 15ல் முடிந்தது.இதில், அரசு ஒதுக்கீட்டில், 2,200 இடங்களுக்கு, 1,874 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, தரவரிசை பட்டியலை நிர்ணயம் செய்வதற்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது. இந்த விபரங்களை, அண்ணா பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கான, www.tnea.ac.in/barch2018, என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment