புதிய சிம் கார்டுகளை வாங்க இனி ஆதார்அடையாள அட்டையை கட்டாயம் வழங்கவேண்டிய அவசியம் இல்லை என மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் சலுகைகளை பெறவும் அரசின் பல்வேறு பயன்பாடுகளுக்கும் ஆதார் கட்டாயம் என்ற விதியை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இதில் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைப்பது அவசியம் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வற்புறுத்தி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனையடுத்து சிம்கார்டு வழங்குவதற்கான முறைகளில், ஆதார் எண் தேவை இல்லை என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்கவும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி செல்போன் சிம்கார்டுக்காக ஆதார் அட்டையை வாடிக்கையாளர்களிடம் கட்டாயபடுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் கார்டு அளிக்காவிட்டாலும் சிம்கார்டு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment