Please Click the link & get 2000 Rs instantly

Monday 9 April 2018

How to Check if Aadhar Card - PAN Card are Linked or Not?

how to view and download patta chitta online 2018?

How to Fix Thumbnail previews not Displayed on Windows 10, 8, 7?

How To Fix 'file too large for destination file system' Error in Windows...

TN govt to change colour of school uniform அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,...

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடை


அரசு பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ -மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய நிறத்தில் சீருடைகள் அறிமுகப் படுத்தப்படுகின்றன.
அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு, இலவச சீருடைகள் லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிறத்தில் வழங்கப்படுகின்றன. இதே நிறத்திலான சீருடைகளை 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் சொந்த செலவில் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆதிதிராவிடர் உள்ளிட்ட நலத்துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை வரும் கல்வி ஆண்டில் 9, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி சீருடையை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல் நிற பேண்டும், இளஞ்சிவப்பு கோடிட்ட மேல் சட்டையும் மாணவிகளுக்கு சுடிதாருடன் கூடிய சாம்பல் நிற கோட்டும் சீருடையாகிறது. அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கரு நீல பேண்டும், கருநீல நிற கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு சுடிதாருடன் கூடிய கருநீல கோட்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. 9 முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த செலவில் சீருடைகளை வாங்கிக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பியுள்ளார்.