அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவிகள் விபத்தில் இறந்தால்

அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவிகள் விபத்தில் இறந்தால் , பலத்த காயம் பட்டால், நிவாரணம் எவ்வளவு?அரசாணையோடு முழு விவரம்!





Tamilnadu Educational News - 27/07/2018

3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினி
அரசு பள்ளி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' எனப்படும், கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், 3,000 பள்ளிகளில், டிஜிட்டல் பலகையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன

3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மூன்று மாதங்களில், டிஜிட்டல் பலகையுடன், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.பாடங்களை ஒளிபரப்ப, தலா ஒரு புரஜக்டர் வழங்கப்படும்

மேலும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு, 3,000, 'டேப்லட்'கள் வழங்கப்படும்
10 மாணவர் வீதம், மொத்தம், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' என்ற, கையடக்க கணினி இலவசமாக வழங்கப்பட உள்ளது
இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்னும், 90 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் இயங்க துவங்கும்; ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் பாடங்கள் நடத்தப்படும்.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு; ஜூலை31-ம் தேதியுடன் முடிவடைய இருந்த அவகாசம் மேலும் ஒரு மாதம்நீட்டித்து உத்தரவு!

CBSE - 214 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்றவர்களுக்கு, 1.5 கோடி விடைத்தாள்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் திருத்தப்பட்டன.இவற்றில், 66 ஆயிரத்து, 876 பேர், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.

 இதில், 4,632 பேருக்கு மட்டும், மறுமதிப்பீட்டில் மதிப்பெண்கள் மாறின.இந்நிலையில், மதிப்பெண்கள் மாறிய மாணவர்களுக்கு, ஏற்கனவே விடைத்தாள் திருத்தியவர்களின் பட்டியலை, சி.பி.எஸ்.இ., சேகரித்தது. இதில், மதிப்பீட்டில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள்,  'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

தமிழகத்திலேயே முதன்முதலாக துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கியூஆர் கோடு பதிந்த அடையாள அட்டை

கரூர் அருகே உள்ள வெள்ளியணையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 87 மாணவர்கள், 69 மாணவிகள் என 156 பேர் கல்வி பயில்கின்றனர். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. அனைத்து மாணவ மாணவியருக்கும் கியூஆர் கோடு எனப்படும் கோடு பதிந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அடையாள அட்டை மூலமாக மாணவர்களின் செயல்பாடுகளையும், வீட்டுபாடங்களையும் பெற்றோர் தங்களது செல்போன் மூலமாகவே தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு
தேர்வு கால அட்டவணை வகுப்பு காலாண்டு அரையாண்டு இறுதி தேர்வு

1 முதல் 8 வரை

செப்.17 - 22 டிச.17 - 22ஏப்., 10 - 18

9 முதல் பிளஸ் 2 வரை

செப்.10 - 22  டிச.10 - 22 ஏப்., 8 - 18

தேர்வு விடுமுறை

செப்.23-அக்.2 டிச.23 - ஜன.1 ஏப்., 19 - ஜூன் 2

வதந்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் ஆப் எனப்படும் தகவல் பரிமாற்ற சேவையை, உலகம் முழுவதும், 130 கோடி பேர், பயன்படுத்தி வருகின்றனர்.நம் நாட்டில் மட்டும், 20 கோடி பேர், வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர்.இதன் வாயிலாக, தவறான தகவல்களும், வதந்திகளும் எளிதில் பரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, நாடு முழுவதும், பல அப்பாவிகள் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள், சமீபத்தில் நடந்தன.இதையடுத்து, வதந்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த, தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, வாட்ஸ் ஆப் நிர்வாகத்துக்கு, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியது

பி.எப்., நிதிக்கு 7.6 சதவீதம் வட்டி
சென்னை : அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பி.எப்., என்ற வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது.
அந்தத் தொகைக்கு ஏப்., 1 முதல் ஜூன் 30 வரை 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மீண்டும் ஜூலை 1 முதல் செப்., 30 வரை பி.எப்.,புக்கு 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Educational News Updates - 26/07/2018

RTE -திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால் பள்ளியை மூடலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இலவச கல்வித் திட்டத்தில் மாணவர்களைச் சேர்ப்பதில் முறைகேடுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

12-ம் வகுப்பு முடித்ததும் பி.எட் பட்டதாரி ஆகலாம்- அடுத்த ஆண்டு முதல்புதிய கல்வித் திட்டம்
தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 5 ஆண்டு பி.எட் பட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
12-ம் வகுப்பு முடித்த உடன் பிஏ.பி.எட்., பிஎஸ்சி.பி.எட் மற்றும் பிகாம்.பி.எட் ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்பாராளுமன்றத்தில் இதன் மீதான விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12 முடித்தவுடன் நேரடியாக பி.எட் சேர முடியும் என தெரிவித்தார்ஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இது போன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

2018-19 ஆண்டுக்கான வருமானவரி கணக்கை ஆதார் இல்லாமல் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும்.

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர, இனி ஆசிரியர் தகுதி தேர்வுடன், போட்டித் தேர்வையும் எழுத வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அதனால், இனி பள்ளி, கல்லுாரி படிப்பில் பெறும் மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது
ஆந்திரா போன்ற மாநிலங்களில், இந்த வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. டெட் தேர்வுடன், போட்டி தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.இந்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், சில முடிவுகள் எடுக்கப்பட்டன.அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வை தனியாகவும், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வை தனியாகவும் நடத்தலாம் என, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

போட்டி தேர்வை எழுது வதற்கு விண்ணப்பிப்பவர்கள், டெட் தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போட்டித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி, விதிமுறைப்படி காலியிடங்களை நிரப்பும்.

தமிழகம் முழுவதும் 400 அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறை களை புதுப்பிக்க நடிகர் சூர்யா திட்டமிட்டுள்ளார். தற் போது மாவட்டத்துக்கு குறைந்தபட் சம் 10 பள்ளிகள் என தமிழகம் முழு வதும் 400 அரசு பள்ளிகளை தேர்வு செய்து, அங்குள்ளகழிப்பறை களை புதுப்பிக்க முடிவு செய்துள்ளார். விரைவில் இப்பணி கள் தொடங்க உள்ளன.இதை கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிப் பறைகளை புதுப்பிப்பது மட்டுமின்றி, தொடர்ந்து அவற்றை சுகாதாரமாக பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

60% மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும் என்று எஸ்.பி.ஐ வங்கி கூறியுள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கையாக இருந்தால் கல்வி கடன் வழங்கப்படாது என்று எஸ்.பி.ஐ வங்கி தலைஞாயிறு கிளை மேலாளர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மாணவரின் தந்தை பெயரில் எந்த கடனும் நிலுவையில் இருக்க கூடாது என்றார். மேலும் உத்திரவாத பத்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என்று

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.


  தமிழ் வழி வகுப்புகள் 50%, ஆங்கில வழி வகுப்புகள் 50% இருக்கலாம் என்று  வெளியிடப்பட்ட அரசாணையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் இன்று துவக்கம்

இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் இன்று துவக்கம்: 10,000 பேர் பங்கேற்பு
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
முதல் சுற்றில் பங்கேற்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, விருப்ப பாடத்தை தேர்வு செய்ய, மூன்று நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்.,படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங்நடத்தப்படுகிறது. பல்வேறு தடைகளை தாண்டி, 1.76 லட்சம் இடங்களுக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. மொத்தம், ஐந்து சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.முதல் சுற்றில், 'கட் ஆப்' மதிப்பெண், 190 வரை பெற்றுள்ள, 10 ஆயிரம் மாணவர்களுக்கு, இன்று விருப்ப பாடப்பதிவு துவங்குகிறது. நள்ளிரவு, 12:01 மணி முதல், மாணவர் சேர்க்கைக்கான, https://www.tnea.ac.in என்ற இணையதளத்தில், விருப்ப பதிவு வசதி துவங்குகிறது. நாளைமறுநாள், மாலை, 5:00 மணி வரை, விருப்ப பாடம் மற்றும் கல்லுாரியை, ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

நாளை மறுநாள்,மாலை, 5:00 மணிக்குள் பதிவை முடித்து, தங்களின் இணையதள பக்கத்தை, 'லாக்' செய்ய வேண்டும்.'லாக்' செய்யாமல் விட்டால், மாலை, 5:00 மணிக்கு பின், இணைய தளத்தில் தானாகவே விருப்ப பதிவு லாக்காகும். ஒரு முறை, லாக் செய்து விட்டால், மீண்டும் மாற்ற முடியாது.அதேபோல, ஒரு மாணவர், எத்தனை கல்லுாரி மற்றும் விருப்ப பாடத்தையும் பதிவு செய்யலாம்.ஆனால், காலியிடங்கள் அடிப்படையில், எந்த கல்லுாரி மற்றும் விருப்ப பாடம், மாணவர்களின் பட்டியலில் முதலில் உள்ளதோ, அந்த இடமே மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். எனவே, கல்லுாரிகளையும், பாடப்பிரிவையும் வரிசைப்படுத்தி பதிவதில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்களின், 'கட் ஆப்' மதிப் பெண் அடிப்படையில், கல்லுாரிகளையும், விருப்ப பாடத்தையும் தேர்வு செய்யலாம்.மூன்று ஆண்டுகளில், அண்ணாலை பல்கலை கவுன்சிலிங்கில், எந்த, 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு, எந்த கல்லுாரி, எந்த பாடப்பிரிவு கிடைத்தது என்ற விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் மாவட்ட வாரியாகவும், கல்லுாரி, பாடப்பிரிவு, கட் - ஆப் மதிப்பெண் என, எந்த ரீதியாகவும் பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.மாணவர்கள், தங்கள் வீட்டில் இருந்தபடி, பெற்றோர் ஆலோசனையுடன், நாளை மறுநாள் மாலைக்குள், விருப்ப பதிவை மேற்கொள்ளலாம். இணையதளம் மற்றும் கணினி வசதி இல்லாதவர்கள், நேரடியாக அண்ணா பல்கலையின் உதவி மையங்களுக்கு சென்றால், அங்கு எளிதாக ஆன்லைனில் விருப்ப பாடப்பதிவை மேற்கொள்ளலாம்.இந்த மையங்களின் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

'பாஸ்வேர்டை' கொடுக்காதீர்! :

விருப்ப பாடத்துக்கான, 'ஆன்லைன்' பதிவுக்கு, தனியார் கல்லுாரிகள் மற்றும் பயிற்சி மையங்களின் கணினிகள், பிரவுசிங் மையங்களின் கணினி களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, மாணவர் சேர்க்கை கமிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, தங்களது, 'லாக் இன்' என்ற, பயன்பாட்டாளர் குறியீட்டு எண் மற்றும் ரகசிய, 'பாஸ்வேர்டு' எண்ணை, மாணவர்கள் வேறு நிறுவனங்களிடமோ, தெரியாத நபர்களிடமோ கொடுக்க வேண்டாம். அவ்வாறு கொடுத்தால், மாணவர்களின் விருப்ப பதிவில் அவர்கள், தங்கள் விருப்பத்துக்கான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை மாற்றம் செய்யும் அபாயம் உள்ளது என்றும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Flash News: TET Weightage Method Canceled

Flash News: TET Weightage Method Canceled - GO Published!
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு




Tamilnadu Educational News

Flash News: TET Weightage Method Canceled - GO Published!
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று துவங்குகிறது
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. தமிழகத்தில், கால்நடை மருத்துவ பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில்,
கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு மற்றும், பி.டெக் படிப்புகளுக்கு 460 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லுாரியில் இன்று துவங்குகிறது.

பொறியியல் படிப்புக்கும் விரைவில் ‘நீட்’ தேர்வு
செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலை யில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலை. தலைவர் மேரி ஜான்சன், இணைவேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா, திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலை. சார்பாக கவுரவ டாக்டர்பட்டம் வழங்கப்பட்டது.சுமார் 2470 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், 86 மாணவர் களுக்கு பல் மருத்துவ பட்டமும், 85 மாணவர்களுக்கு ஆராய்ச்சி முனைவர் பட்டமும் வழங்கப்பட் டது. மேலும், ஒவ்வொரு துறை யிலும் சிறந்து விளங்கிய 29 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தி யாளர்களை சந்தித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா கூறும் போது, “மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தகுதித் தேர்வு நடைபெறுவது போல், பொறியியல் படிப்புக்கும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வானது வருகின்ற கல்வியாண் டில், அதாவது 2019 -ம் ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட் டுள்ளது” என்று தெரிவித்தார்

பிளஸ் 2 துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வின் முடிவு, இன்று வெளியாகிறது.இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, உடனடி துணை தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவு, http://www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில், இன்று வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வு முடிவில் சந்தேகம் உள்ளவர்கள், நாளை முதல் இரண்டு நாட்கள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 ஜூன் 2018 | துணைத்தேர்வு முடிவு நாளை வெளியீடு.

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வில் கலந்துகொள்ளாதவர்கள் ஆகியோருக்காக ஜுன் மாதம் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த வருடம் பிளஸ் 2 துணைத்தேர்வு ஜுன் 25 முதல் ஜூலை 4ம் தேதி வரை நடந்தது. இதற்கான முடிவுகள் நாளை வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  www.dge.tn.nic.in,  இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். 

 Flash News : 10,+2 தனித்தேர்வர்கள் சட்டப்படிப்பு படிக்கலாம்!
10,+2 தனித்தேர்வர்கள் அங்ககீரிக்கப்பட்ட பல்கலை

பட்டம் பெற்றிருந்தால் சட்டப்படிப்பு படிக்கலாம் ,

தொலைதூர கல்வியில் பயின்றால் படிக்க

முடியாது - வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம்

உத்தரவு.


 

TET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வா? PUBLICATION OF CERTIFICATE OF MARKS



டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு ஏன் என்று ஜாக்டோ ஜியோ பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம்கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்துஅவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ச்சியடைந்து, அதற்குப்பின் தகுதித்தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகங்களிலே பதிவு செய்து 2013ம் ஆண்டு முதல் பணிக்காகக் காத்திருப்போர் தமிழக அரசுஅண்மையில் தந்துள்ள புள்ளிவிவரப்படி 82 ஆயிரம் பேர்களாவர்.

தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கே மீண்டும்ஒரு தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் முறை இரண்டையும் எதிர்த்துப் போராடியதால் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் ஆசிரியர் பணிநியமனத்திற்குக் கடைப்பிடித்து வந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்திருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தித்தான் பணியளிக்கப்போவதாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல கண்டிக்கத்தக்கது ஆகும்.

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017
          
PUBLICATION OF CERTIFICATE OF MARKS
              As per the Notification No.01/2017, dated 24.02.2017, Teacher Eligibility Test – Paper I Written Examination was conducted on 29th April 2017.
             2,41,555 Candidates had appeared for the written examination, Tamil Nadu Teacher Eligibility Test – Paper – I. Now, the certificate of marks are published in Teachers Recruitment Board website. Candidates can download the certificate of marks from the Teachers Recruitment Board official website www.trb.tn.nic.in within one month. For any information candidates can contact information centre help line numbers. 044-28272455, 7373008144, 7373008134.
            Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.

Friday, 20 July 2018

BE - பொறியியல் படிப்பு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடக்கம்!


பொறியியல் படிப்பு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்குகிறது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.
 

Flash News : BE - ஆகஸ்ட் 31 வரை கவுன்சிலிங் நடத்தலாம்!
அண்ணா பல்கலை கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட்31 வரை பி.இ. கவுன்சிலிங் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 509 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, 1.73 லட்சம் இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை, 31க்குள், கவுன்சிலிங்கை நடத்தி முடித்து, ஆகஸ்டில் வகுப்புகளை துவங்க வேண்டும்.ஆனால், 'நீட்' தேர்வு பிரச்னையால், மருத்துவ கவுன்சிலிங் நடக்கவில்லை. இதனால், இன்ஜி., பொது பிரிவு கவுன்சிலிங், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கிற்குப்பின் அல்லது ஜூலை, 31க்கு பின், கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 இந்த வழக்கு, ஜூலை, 16ல் விசாரணைக்கு வந்து, 17ல்  தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில், கூடுதல் விபரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை, 18 ல் தள்ளி வைத்து உள்ளது.இதனால், பொது பாடப்பிரிவுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பை நேற்றைக்கு வெளியிட்டது  இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி

BE - 3ம் கட்ட கவுன்சிலிங் இன்று  முதல் துவக்கம்

இன்ஜியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவினருக்கு, மூன்றாம் கட்ட ஒதுக்கீடு, இன்று துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, இரண்டு விதமான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கும், மற்றவர்களுக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங்கும் நடத்தப்படுகிறது.
ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.
மூன்றாம் கட்ட கவுன்சிலிங், இன்று  துவங்குகிறது.முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு, 50 காலியிடங்களுக்கு, நாளையும்; விளையாட்டு பிரிவினருக்கு, 150 காலியிடங்களுக்கு, நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, இ - மெயிலில் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

BE - 3ம் கட்ட கவுன்சிலிங் நாளை முதல் துவக்கம்/ பி.ஆர்க்., 'ரேண்டம்' எண் வெளியீடு

BE - 3ம் கட்ட கவுன்சிலிங் நாளை முதல் துவக்கம்

இன்ஜியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவினருக்கு, மூன்றாம் கட்ட ஒதுக்கீடு, நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, இரண்டு விதமான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கும், மற்றவர்களுக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங்கும் நடத்தப்படுகிறது.
ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.
மூன்றாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு, 50 காலியிடங்களுக்கு, நாளையும்; விளையாட்டு பிரிவினருக்கு, 150 காலியிடங்களுக்கு, நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, இ - மெயிலில் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையில், நேற்று முன்தினம் துவங்கிய, தொழிற்கல்வி கவுன்சிலிங், இன்று முடிகிறது.

பி.ஆர்க்., 'ரேண்டம்' எண் வெளியீடு
பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு, 'ரேண்டம்' எண் வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட, கட்டட வடிவமைப்பியல் படிப்புக்கான, 'ஆர்கிடெக்' கல்லுாரிகளில், பி.ஆர்க்., பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அண்ணா பல்கலையால் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்கு, கடந்த, 4ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, 15ல் முடிந்தது.இதில், அரசு ஒதுக்கீட்டில், 2,200 இடங்களுக்கு, 1,874 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, தரவரிசை பட்டியலை நிர்ணயம் செய்வதற்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது. இந்த விபரங்களை, அண்ணா பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கான, www.tnea.ac.in/barch2018, என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்?

இன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்? 21ம் தேதி வெளியாகிறது அறிவிப்பு

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கோரும் வழக்கை, இன்று, உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளதால், பொது கவுன்சிலிங் அறிவிப்பு, 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுஉள்ளது.
சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 509 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, 1.73 லட்சம் இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.தள்ளி வைப்புசிறப்பு பிரிவினர், தொழிற்கல்வி மாணவர்கள், விளையாட்டு பிரிவினர் உள்ளிட்டோருக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் மட்டும், இந்த ஆண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை, 31க்குள், கவுன்சிலிங்கை நடத்தி முடித்து, ஆகஸ்டில் வகுப்புகளை துவங்க வேண்டும்.ஆனால், 'நீட்' தேர்வு பிரச்னையால், மருத்துவ கவுன்சிலிங் நடக்கவில்லை. இதனால், இன்ஜி., பொது பிரிவு கவுன்சிலிங், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கிற்குப்பின் அல்லது ஜூலை, 31க்கு பின், கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாற்றம்
இந்த வழக்கு, ஜூலை, 16ல் விசாரணைக்கு வந்து, நேற்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.நேற்று இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில், கூடுதல் விபரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை, இன்றைக்கு தள்ளி வைத்து உள்ளது.இதனால், பொது பாடப்பிரிவுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பை, வரும், 21ம் தேதிக்கு, இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி மாற்றியுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைத்தால், கவுன்சிலிங் தேதியை நேற்று அறிவிக்கலாம் என, தமிழக அரசு முடிவு செய்திருந்த நிலையில், வழக்கின் விசாரணை தள்ளிப்போனதால், அறிவிப்பு வெளியாகவில்லை.

பி.எட். சேர்க்கை: நாளைமுதல் கலந்தாய்வு

பி.எட். சேர்க்கை: நாளைமுதல் கலந்தாய்வு தொடக்கம் - முழு விவரம் உள்ளே.

b

இரண்டு ஆண்டுகள் இளநிலை ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கப்பட உள்ளது.
கலந்தாய்வு தேதி, கட்-ஆஃப் விவரங்கள் கலந்தாய்வை நடத்தும் விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு கல்வி நிறுவனத்தின் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 600-க்கும் அதிமான பி.எட். கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,707 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, சென்னை காமராஜர் சாலையில் உள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு கல்வி நிறுவனம் நடத்தி வருகிறது.
2018-19 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்க உள்ளது. இதற்கு மொத்தம் 6,669 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 6 விண்ணப்பங்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
62 பேர் பொறியியல் பட்டதாரிகள்: விண்ணப்பித்தவர்களில் 62 பேர் பி.இ. பட்டதாரிகள் ஆவர். பொறியியல் பட்டதாரிகளுக்கென மொத்த பி.எட். இடங்களில் 116 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கட்டணம் எவ்வளவு? கலந்தாய்வில் பங்கேற்க வருவோர், 'The Secretary, Tamilnadu B.Ed. Admission, Chennai' என்ற பெயரில் கந்தாய்வுக் கட்டணத்தை வரைவோலையாகக் கொண்டு வர வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பு (எஸ்.சி.), பழங்குடி (எஸ்.டி.) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.1,000, மற்ற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.2,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கு... பி.எட். சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், பொறியியல் பட்டதாரிகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

TNEA Latest Updates 2018

List of Documents to be produced in original at the college

  1. PROVISIONAL ALLOTMENT ORDER AND ACKNOWLEDGEMENT FOR RECEIPT OF INITIAL PAYMENT
  2. 10th Mark Sheet
  3. HSC/Equivalent Mark Sheet
  4. Transfer Certificate and Conduct Certificate
  5. Medical Fitness Certificate
  6. Permanent Community Certificate
  7. Nativity Certificate
  8. First Graduate Certificate and joint declaration
  9. Srilankan Tamil Refugee Certificate
  10. Income Certificate
  11. Four Copies of Passport Size Photo

விரைவில் வருகிறது அரசு பள்ளிகளில் " வைபை " வசதி | 11ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும்

வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவு  வெளியான 15 நாளில், தனியார் கல்லூரிகளில் உணவு, இருப்பிட  வசதியுடன் ஆண்டுதோறும் 25,000 மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி (சி.ஏ) அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


விரைவில் அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவி  பொருத்தப்படும்

வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு படிக்கும்  மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.
 
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இரண்டு மாதங்களில், இலவச இணையதள,'வைபை' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள, கல்வியில் பின்தங்கிய, 13 மாவட்டங்களில் உள்ள, 366 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு, 9.06 கோடி ரூபாய் மதிப்பில், இலவச இணையதள, வைபை வசதி ஏற்படுத்த, அரசுஒப்புதல் அளித்தது.இதில், முதல் கட்டமாக, 50 அரசு மேல் நிலைப்பள்ளிகளில், 1.23 கோடி ரூபாய் செலவில், வைபை சேவை வசதி வழங்க,நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.இதற்கான பணிகளில், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:அரசு மேல்நிலை பள்ளிகளில், இலவச இணையதள, வைபை வசதி வழங்கும் திட்டத்தை, 2017ல், தமிழக அரசு, அறிவித்தது. தற்போது, இதற்கானநிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.முதல் கட்டமாக, 50 அரசு மேல்நிலைப் பள்ளி களில் சேவை வழங்க, 'டெண்டர் 'கோரப்பட்டுள்ளது.

விரைவில் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களில், பள்ளிகளுக்கு, இலவச, வைபை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
 
 

BE - தொழிற்கல்வி பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை 18 முதல் 20 வரை இன்ஜினியரிங் கலந்தாய்வு!

BE - தொழிற்கல்வி பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை 18 முதல் 20 வரை இன்ஜினியரிங் கலந்தாய்வு!
இன்ஜினியரிங் தொழிற்கல்வி பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டது. அதன்படி இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு இணையதளம், 42 இணைய சேவை மையங்களில் விண்ணப்பித்தல் மே 3ம் தேதி தொடங்கி ஜூன் 2ம் தேதி முடிந்தது. அதில் 1,59,631 பேர் அரசு ஒதுக்கீடு இன்ஜினியரிங் இடங்களில் சேர விண்ணப்பித்தனர். கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள 1,04,453 பேருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 28ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஜூலை 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இந்நிலையில் ஜூலை 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை தொழிற்கல்வி பிரிவின்கீழ் (வொக்கேசனல்) விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை www.annauniv.edu, www.tnea.ac.in ஆகிய இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

BE - ஆன்லைன் கவுன்சலிங் எவ்வாறு நடைபெறும் அண்ணா பல்கலை விளக்கம்!

BE - ஆன்லைன் கவுன்சலிங் எவ்வாறு நடைபெறும் அண்ணா பல்கலை விளக்கம்!
பொறியியல் படிபுக்கான சேர்க்கை ஆன்லைன் மூலம் நடக்க இருப்பதால், ஆன்லைன் கவுன்சலிங் எப்படி நடக்கும் என்பது குறித்து அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் நேற்று விளக்கம் அளித்தனர்.

பொறியியல் படிப்பு சேர்க்கை பொதுப்பிரிவுக்கான கவுன்சலிங் நடக்க உள்ளது. இந்த கவுன்சலிங் 5 குழுவாக பிரிக்கப்படும்.

  அதில் 6  படிநிலைகள் மூலம் மாணவர்கள் தங்கள் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்.

* முன்பணம் இணையம் மூலம் செலுத்துதல்- இதற்கு 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும்.
* ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்- இதற்கு 2 நாள் ஒதுக்கப்படும்.
* தற்காலிக ஒதுக்கீடு குறித்து எஸ்எம்எஸ் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
* தற்காலிக ஒதுக்கீட்டை இறுதி செய்ய அவகாசம் அளிக்கப்படும். 2 நாட்கள் மாணவர்கள் எடுத்துக் கொ்ள்ளலாம்.
* உண்மை ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படும். இதற்காக ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படும்.
* ஒதுக்கீடு குறித்த வெளியீடுகள்  மற்றும் காலி இடங்கள்  குறித்து விவரங்கள் தெரிவிக்கப்படும்.

கவுன்சலிங்கில் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்ய உள்ள கல்லூரிகளில் குறியீட்டு எண் அல்லது கல்லூரியின் பெயர், அல்லது மாவட்டம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு மாணவர்கள் தெரிவு செய்த பட்டியல் இணையத்தில் வரும்.  இட ஒதுக்கீடு குறித்த படிநிலையில், 3 வாய்ப்புகள் அளிக்கப்படும் அதில் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உறுதி மொழி அளிக்க வேண்டும். மேற்கண்ட ஆன்லைன் கவுன்சலிங் குறித்த விவரங்கள் புரியாமல் உள்ள மாணவ மாணவியர் 44 மையங்களில் சென்று கல்லூரிகள், பாடங்களை பதிவு செய்து இட ஒதுக்கீடு பெறலாம். இது தொடர்பான தெளிவான விளக்கம் அடங்கிய தொகுப்பு அண்ணா பல்கலைக் கழக இணையத்தில் விரைவில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாதி, வருமானம், இருப்பிடம் சான்று மொபைல் ஆப் வெளியீடு!

சாதி, வருமானம், இருப்பிடம் சான்று மொபைல் ஆப் வெளியீடு!

தமிழகம் முழுவதும் இருப்பிடம், வருமானம், சாதி சான்றிதழ்கள் பெற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு சாதி, வருமான, இருப்பிட, முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய 5 சான்றிதழ்கள் முதலில் வழங்கப்பட்டு வந்தது.

பின்னர் விவசாய வருமான சான்றிதழ், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவைச்சான்றிதழ், வேலையின்மை சான்றிதழ், குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ்,

ஆண் குழந்தை இன்மை சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், செல்வநிலை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சான்றுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இ-சேவை மையங்களில் அடிக்கடி சர்வர் பழுது காரணமாக பொதுமக்கள் சான்றிதழ் விண்ணப்பிக்க முடியாமலும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் ‘UMANG’ என்ற ஆப்பை போனில் டவுன்லோடு செய்து அதன் மூலம் சாதி, இருப்பிட, வருமான சான்றிதழ் பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலை மற்றும் சான்றிதழ் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘UMANG ஆப்பில் ஆதார் அடிப்படை மட்டும் விண்ணப்பிக்க முடியும். முதலில் விண்ணப்பதாரின் முழு விவரங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் சாதி, வருமானம், இருப்பிடம் சான்றுகள் விண்ணப்பிக்க முடியும். அதில் விண்ணப்பதாரின் ஆவணங்கள் புகைப்படம் அல்லது பிடிஎப் பைலாக பதிவேற்றம் செய்யலாம். புதியதாக நபர்களின் ஆதார் எண்ணை இணைத்து அதன்பிறகு சான்றிதழ் விண்ணப்பிக்கலாம். இதேபோல், ஆதார் எண் அடிப்படையில் சான்றிதழ் எளிமையாக பெறலாம்’ என்றனர்.

வேளாண் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு

வேளாண் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது: வழக்கம்போல பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கு கடும் போட்டி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக திங்கள்கிழமை தொடங்கிய ஆன்லைன் கலந்தாய்வில் பி.எஸ்சி. வேளாண் படிப்புக்கான பெரும்பாலான இடங்கள் முதல் நாளிலேயே நிரம்பியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கானகலந்தாய்வில் 67 இடங்கள் பூர்த்தியாகின. இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வுதிங்கள்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழக வரலாற்றிலேயே மாணவர்கள் நேரில் வராமலேயே மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். எனவே, குளறுபடிகள் ஏதும் நடைபெறாமல் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.இருப்பினும் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது முதல் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கலந்தாய்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் பிற்பகலுக்குள் அது சரி செய்யப்பட்டது.

இதுகுறித்து மாணவர் சேர்க்கைப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

ஆன்லைன் மூலம் கலந்தாய்வு என்றாலும் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில்தான் இடங்களைப்பூர்த்தி செய்ய முடியும். இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கும் மாணவர்கள் அதை 11-ஆம் தேதிக்குள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 12-ஆம் தேதிஎத்தனை காலி இடங்கள் உள்ளன, அவற்றுக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்படும். வழக்கம்போலவே இந்த ஆண்டும் பி.எஸ்சி. வேளாண்மைப் படிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதிலேயே மாணவர்கள் ஆர்வம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

இனி ஆண்டுக்கு இரண்டு நீட் தேர்வுகள் நடத்த CBSE முடிவு!

இனி ஆண்டுக்கு இரண்டு நீட் தேர்வுகள் நடத்த CBSE முடிவு!
சி.பி.எஸ்.இ.,யால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த, 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு, ஐ.ஐ.டி., படிப்புகளுக்கான, ஜே.இ.இ., மற்றும் பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, 'நெட்' தேர்வுகளை, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பு இனி நடத்தும்,
'' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார்.

ஆண்டுக்கு இரு நீட் தேர்வு, எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ, அது ஏற்கப்படும்; ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறுஅறிவிப்புகளால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உயர் கல்விகளுக்கான நுழைவுத்தேர்வுகளை, தன்னாட்சி அதிகாரம் பெற்ற சிறப்பானதொரு அமைப்பின் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் பதவி வகித்து வந்த அருண் ஜெட்லி, 2017 - 18பட்ஜெட்டில் அறிவித்தார். இதையடுத்து, இந்த தேர்வுகளை நடத்த, தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டது.

இது தொடர்பாக, 2017, நவம்பரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தேசிய தேர்வு முகமை என்ற தனி அமைப்புக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, ஐ.ஐ.டி., படிப்புகளுக்கான, ஜே.இ.இ., மற்றும் பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, 'நெட்' எனப்படும், தேசிய தகுதி தேர்வு ஆகியவற்றை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தி வந்தது. 'இந்த தேர்வுகளை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பு நடத்தும்' என, மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடத்தப்பட்டு வந்த நீட், ஜே.இ.இ., தேர்வுகள், இனி, ஆண்டுக்கு, இருமுறை நடத்தப்படும்.நீட் தேர்வுகள், பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும். மாணவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகின்றனரோ, அதுவே ஏற்கப்படும். ஜே.இ.இ., தேர்வுகள், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, நெட் தேர்வுகள், டிசம்பர் மாதம் நடத்தப்படும். இந்த தேர்வுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படுகின்றன. இதற்காக, அனைத்து நகரங்கள்,கிராமங்களில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளில், அரசு கணினி பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன. இந்த மையங்களில், மாணவர்கள் ஆண்டு முழுவதும், இலவச பயிற்சி பெறலாம். இதன் மூலம், கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு முன், தங்களை சிறப்பாக தயார் செய்து கொள்ள முடியும். இந்த மையங்கள், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செயல்படும். விருப்பம் உள்ள அனைவரும், இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம். ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் இருந்து,இலவச கணினி பயிற்சி மையங்கள் செயல்பட துவங்கும். இதுகுறித்த விரிவான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.

ஒவ்வொரு தேர்வும், நான்கு அல்லது ஐந்து நாட்களில் நடத்தப்படும். இதில், பாடத்திட்டம், கேள்வி வடிவம் மற்றும் தேர்வு எழுதும் மொழியில் மாற்றம் எதுவும் இல்லை. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வு,புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, தேசிய தேர்வு முகமை மூலம், முதல் முறையாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகள், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மென்பொருள் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படும். சர்வதேச தரத்தில் நடைபெறும் புதிய தேர்வு முறையில், கேள்வித்தாள் வெளியாவது போன்ற முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார். ஆண்டுக்கு இரு, 'நீட்' தேர்வு, எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ, அது ஏற்கப்படும்; ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிபுணர்கள் குழு தயார்!

புதிய தேர்வு நடைமுறையை, சிறப்பாக செயல்படுத்த, கல்வி நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், புள்ளியியல் ஆய்வாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோரை, அரசு நியமனம் செய்ய உள்ளது. இவர்களின் உதவியுடன், தேர்வு முறையில் எதிர்கொள்ளப்படும் நடைமுறை சிக்கல்கள் சரி செய்யப்படும்.வினா தாள்களை வடிவமைக்க, நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. கேள்விகளை தயார் செய்வதில், அவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பர்.நிபுணர் குழுவுக்கான உறுப்பினர்கள், தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவர்கள் விரைவில், தேசிய தேர்வு முகமையில் இணைந்து பணியாற்றுவர் என்றும் கூறப்படுகிறது.

Friday, 6 July 2018

முதல்கட்ட எம்பிபிஎஸ் பிடிஎஸ் கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது

இன்றுடன் நிறைவடைகிறது முதல்கட்ட எம்பிபிஎஸ் பிடிஎஸ் கலந்தாய்வு !
எம்பிபிஎஸ் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது. இன்றைய கலந்தாய்வில் பங்கேற்க 1,112 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக நேற்று மாலையுடன் 5 நாள் பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிந்துள்ளது.  இந்நிலையில் அரசுகல்லூரிகளில் எஸ்சி, எஸசிஏ, எஸ்டி பிரிவுகளில் 196 இடங்களும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள் 200ம், அரசுப் பல் மருத்துவக்கல்லூரியில் 16 இடங்களும், தனியார் பல்மருத்துவகல்லூரிகளில் 641 அரசு ஒதுக்கீடு இடங்களும் மட்டுமே காலியாக உள்ளன.

இந்த இடங்களில் அரசுக்கல்லூரிகளில் 212 இடங்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய கலந்தாய்வுக்கு 1,112 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் அரசுக்கல்லூரிகளில் இடம் இல்லாத மாணவர்கள் வேறு வழியின்றி தனியார் கல்லூரிகளில் சேர்கின்றனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடர்பாக மருத்துவக்கல்வி இயக்கக இணைதளத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூபதிராஜாவுக்கு இடம் கிடைக்குமா?: முன்னாள்  ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் கலந்தாய்வில்எழும்பூர் ரயில் நிலையத்தில் சான்றிதழை தொலைத்த விருதுநகர்  மாவட்டத்தை சேர்ந்த மாணவர் பூபதி ராஜா இன்று கலந்தாய்வில்  பங்கேற்க இருக்கிறார்.

Wednesday, 4 July 2018

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை 80 ஆயிரம் காலி இடங்கள்

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை 80 ஆயிரம் காலி இடங்கள்
பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கையில், சிவில் பிரிவில், 13 ஆயிரத்து 874 இடங்கள் உட்பட, மொத்தம், 80 ஆயிரம் காலியிடங்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
பாலிடெக்னிக், பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்காக கலந்தாய்வு காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லுாரியில்,கடந்த 30ல் துவங்கியது. பொதுப்பிரிவான சிவிலுக்கு நடந்து முடிந்துள்ளது. தற்போது மெக்கானிக்கல் பிரிவுக்கு நடந்து வருகிறது.தமிழகம் முழுவதும் உள்ள, 500 இன்ஜி., கல்லுாரிகளிலிருந்து, 20 சதவீத அடிப்படையில் சிவிலுக்கு, 15721 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 2150 பேர் விண்ணப்பித்ததில், 1847 பேர் மட்டுமே பங்கேற்று சேர்க்கை ஆணை பெற்றனர். 13 ஆயிரத்து 874 இடங்கள் காலியாக உள்ளன.மெக்கானிக்கலை பொருத்தவரை, 21ஆயிரத்து 670 இடங்களுக்கு, 4800 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு, 50 ஆயிரத்து 989 இடங்களுக்கு, 4050 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட, 90 ஆயிரம் இடங்களில், 10ஆயிரம் இடங்களே நிரம்பும் நிலை இருப்பதால், 80 ஆயிரம்காலி இடங்களுடன் கல்லுாரிகள் செயல்படும் நிலை உள்ளது.

TRB - சிறப்பாசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு

TRB - சிறப்பாசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை உடனே வெளியிட கோரி மனு!
சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 -ஆம் தேதி உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வைஎழுதியுள்ளோம்தேர்வு நடைபெற்று 9 மாதங்களாக முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், கடந்த ஜூன் 14 -ஆம் தேதி தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது மேலும், நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு மதிப்பளித்து ஓ.எம்.ஆர். நகலையும் ஆசிரியர் தேர்வு வாரிய வளாக கணினி திரையில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்ததுசிறப்பாசிரியர் போட்டித் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு 15 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கான  பட்டியலையும் விரைவாக வெளியிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில பாடத்திட்டத்தில் +2 படித்தவர்களுக்கு 70% எம்.பி.பி.எஸ். இடம் : அமைச்சர் விஜயபாஸ்கர்


மாநில பாடத்திட்டத்தில் +2 படித்தவர்களுக்கு 70% எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளியில் படித்தவர்களுக்கு 30% எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். பொதுப்பிரிவினருக்கு நடக்கும் கலந்தாய்வின் முதல்நாளான இன்று 598 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழக மாணவி கீர்த்தனாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இடம்! எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழகத்தில் நீட் தேர்வில்





முதலிடம் பிடித்த மாணவி கீர்த்தனாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது.


Schedule announced; first round of counselling expected to conclude on July 7
Counselling for admission to MBBS/BDS is all set to begin in the city on Sunday. The first day of counselling will be for special categories — candidates with disabilities, children of ex-servicemen and sportspersons. The counselling will be held at the Government Multi-Super Speciality Hospital, Omandurar Government Estate.

The general counselling will commence on July 2. It will start at 9 a.m. for candidates with NEET scores in the range of 676 to 544 followed by candidates with scores from 543 to 471 at 11 a.m. and 470 to 444 at 2 p.m. Candidates with NEET score ranging from 443 to 424 should attend the counselling session at 9 a.m. on July 3 followed by those with NEET scores ranging from 423 to 409 at 11 a.m. and 408 to 393 at 2 p.m.

On July 4, the counselling will be held for those with NEET scores from 392 to 383 at 9 a.m., 382 to 374 at 11 a.m. and 373 to 357 at 2 p.m.

Candidates with NEET scores from 356 to 346 should attend the counselling at 9 a.m. on July 5 followed by those who had scored from 345 to 335 at 11 a.m. and 334 to 309 at 2 p.m.

On July 6, the general counselling will be held for candidates with NEET scores from 308 to 298 at 9 a.m. and from 297 to 293 at 11 a.m.

The counselling for candidates belonging to BCM with NEET scores from 292 to 246 will be held at 2 p.m., while the session for those belonging to MBC/DNC with NEET marks in the range of 292 to 281 will be held at 3 p.m.

At 9 a.m. on July 7, the counselling for MBC/DNC candidates with scores in the range of 280 to 264 will be held. This will be followed by counselling for SC candidates with NEET scores in the range of 292 to 242 at 11 a.m. and 241 to 211 at 2 p.m. The counselling for SC(A) candidates with NEET scores in the range of 291 to 153 will be held at 3 p.m. and for ST candidates with NEET scores from 284 to 111 at 4 p.m.

BE - இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கல்லூரியினை எவ்வாறு தேர்வு செய்வது?

BE - இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கல்லூரியினை எவ்வாறு தேர்வு செய்வது?
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், எந்த தரவரிசைக்கு, எந்த கல்லுாரி கிடைக்கும் என்ற புதிய தகவலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.

இதில், மூன்றாண்டு தரவரிசை எண்கள் இடம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.

கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.04 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல், ஜூன், 28ல் வெளியானது. ஜூலை, 10க்கு பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடக்க உள்ளது. இந்நிலையில், தரவரிசையில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு, எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தை போக்கும் வகையில், அண்ணா பல்கலையில் இருந்து, புதிய வழிகாட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான, https://tnea.ac.in என்ற இணையதளத்தில், இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.ஒவ்வொரு கல்லுாரியிலும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், எந்த தரவரிசை எண் வரையிலான மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு கிடைத்தது.

 இன வாரியாக எவ்வளவு, 'கட் ஆப்' மதிப்பெண் தேவை, 2015 முதல், 2017 வரை, இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட, 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள், கல்லுாரி வாரியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொண்டால், கல்லுாரிகளை எளிதில் தேர்வு செய்ய முடியும்.