Thursday, 31 May 2018

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை!
மொத்த காலியிடம்: 149
பணி: ஸ்பெஷலிஸ்ட்-05
சம்பளம்: மாதம் ரூ.60,000
பணி: அக்கெளண்டன்ட்-01
சம்பளம்: மாதம் ரூ.30,000
பணி: புராஜக்ட் அசோசியேட்-01
சம்பளம்: மாதம் ரூ.25,000
பணி: செயலக உதவியாளர் -02

சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: ஆபிஸ் மெசேஞ்சர்-02
சம்பளம்: மாதம் ரூ.8,000
பணி: மாவட்ட ஒருங்கிணைப்பாளர்-05
சம்பளம்: மாதம் ரூ.30,000
பணி: புராஜக்ட் அசிஸ்டென்ட்-05
சம்பளம்: மாதம் ரூ.18,000
பணி: ஒருங்கிணைப்பாளர்-64
சம்பளம்: மாதம் ரூ.20,000
பணி: புராஜக்ட் அசிஸ்டென்ட்-64
சம்பளம்: மாதம் ரூ.15,000
கல்வித் தகுதி: பத்தம் வகுப்பு முதல் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வெரு பணிக்கும் தனித்தனியாக வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவர்.
அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18-6-2018
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Director cum Mission Director, 
Integrated Child Development Project Schemes, 
No.6, Pammal Nalla thambi Street, 
M.G.R. Road, 
Taramani, Chennai - 113.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ்நாடு மாநிலக் குழந்தை பாதுகாப்பு சங்க இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லேட் செய்து கொள்ளலாம்.


+2 முடித்தவர்களுக்கு HCL-ல் Engineer வேலை! உடனே முந்துங்கள்

+2 முடித்த மாணவர்களுக்கு HCL-ல் Engineer வேலை!
தகுதி: +2 வில் 85% அல்லது அதற்க்கு மேலும்  மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்
2017 மற்றும் 2018-ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்.
கணிதம் / வணிக கணிதம் கட்டாயம் வேண்டும்.
வேலை வாய்ப்பு விவரம்
15 மாத காலம் SSN College of Engineering-ல் Training கொடுக்கப்படும். training முடிந்தவுடன் Diplomo+HCL ல் வேலை கொடுக்கப்படும்.
பயிற்சி காலம் முழுவதும் ரூபாய் 1௦௦௦௦ ஊக்கத்தொகையாக (stipend) கொடுக்கப்படும்.
பயிற்சி காலம் முடிந்த உடன் HCL Technologies – ல் software engineer/ Design engineer/ System analyst/ Support engineer வேலை தரப்படும்.
ஆலோசனை / நேர்காணல் walk-in for counselling /interview On 1st and 2nd June 2018-05-31
நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
Venue (இடம்): HCL Technologies AMB 6, 8, South Phase, MTH Road, Sidco Industrial Estate, Ambattur, Chennai, Tamil Nadu 600058, Phone: 044 4396 8000.
பதிவு செய்வதற்கு 1800 200 1117, +91 6382711457 என்ற என்னில் கூப்பிடவும்.
மேலும் தகவல்களுக்கு, www.hcltss.com  www.ssn.edu.in/ இந்த இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


TN Government School Uniforms Colors 2018

அரசுப்பள்ளிகளின் சீருடை மாற்றம்- 1 முதல் 12 ஆம் வகுப்புவரை -முழு விவரப்படங்கள்

1st Std to 5th Std

 

 Image result for தமிழ்நாடு அரசுசப்பள்ளிகளின் சீருடை மாற்றம் 2018 | 1 முதல் 12 ஆம் வகுப்புவரை

 For 5th Std to 8th

 Image result for தமிழ்நாடு அரசுசப்பள்ளிகளின் சீருடை மாற்றம் 2018 | 1 முதல் 12 ஆம் வகுப்புவரை

 For 9th & 10th


Image result for தமிழ்நாடு அரசுசப்பள்ளிகளின் சீருடை மாற்றம் 2018 | 1 முதல் 12 ஆம் வகுப்புவரை 

for 11th & 12th

 Image result for தமிழ்நாடு அரசுசப்பள்ளிகளின் சீருடை மாற்றம் 2018 | 1 முதல் 12 ஆம் வகுப்புவரை

 

New User Interface Of Next Generation E-Ticketing System Launched

 Railway's Online Travel Portal, www.irctc.co.in has now launched beta version of its new User Interface. The new link has more user friendly features for easier navigation. By creating Next Generation e-Ticketing (NGeT)system the new online ticket booking system of Railways provides an easy and fast way of booking rail tickets by automating the journey planning and purchase of ticket
 
Salient features of the New User Interface are:

1. A user can now enquire/search trains and check the availability of seats without login also. User can now change font size throughout the website for the comfortable viewing experience.

2. The new look and feel will have enhanced class-wise, train-wise, destination-wise, departure/arrival time wise and quota-wise filters for facilitating customer while planning their journeys.

3. In addition, more features such as new filters on ‘My Transactions’ where user can also view their booked tickets based on Journey Date, Booking Date, Upcoming Journey and completed journey.

4. To enhance customer’s booking experience, interesting features like ‘Waitlist prediction’, etc have been introduced. Using this feature, user can get the probability of a Waitlisted or RAC ticket getting confirmed. 

5. The new look and feel is providing the facility for the user to find out the availability up to the entire Advance Reservation Period i.e. 120 days at present, except few trains.

Saturday, 26 May 2018

பிளஸ் 1, 2 வகுப்புக்கு 2 புதிய பாடங்கள்

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், கணினி தொடர்பான, இரண்டு புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.தமிழக பள்ளி கல்வியில், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், தொழிற்கல்வி குரூப் மாணவர்களுக்கும், 'ஆர்ட்ஸ் குரூப்' மாணவர்களுக்கும், புதிதாக இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன.இந்த ஆண்டே, இந்த புதிய கணினி பாடங்கள், அமலுக்கு வர உள்ளன. அதாவது, 'கம்யூட்டர் சயின்ஸ்' பிரிவுக்கு, 'கணினி அறிவியல்' என்ற பாடம், தொடர்ந்து நடத்தப்படும். ஆனால், வரலாறு, பொருளியல், வணிக கணிதம் போன்ற, ஆர்ட்ஸ் பாடப்பிரிவினருக்கு, கணினி பயன்பாடுகள் பற்றிய, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடம், புதிதாக சேர்க்கப்படுகிறது.அதேபோல், அனைத்து வகை தொழிற்கல்வி குரூப்களுக்கும், 'கணினி தொழில்நுட்பம்' என்ற, பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடங்கள், இந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்புக்கும், அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 2 வகுப்புக்கும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதற்கான உத்தரவை, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்துள்ளார்
தபால் நிலையத்தில் பிபிஎப் கணக்கை திறப்பது எப்படி..?பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும் ஒரு நீண்ட கால முதலீட்டு விருப்பமாகும். பாதுகாப்பு, வருமானம் மற்றும் வரி சலுகைகள் ஆகியவை PPF முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அரசாங்க ஆதரவுடைய PPF முதலீடுகள், உங்கள் முதலீடு பாதுகாப்பானதாக்குகிறது. கடன் விருப்பங்கள் மற்றும் ஒரு குறைந்த பராமரிப்பு செலவுகள் இத்திட்டத்திற்கு கூடுதல் போனஸ். பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கு மட்டுமின்றி, அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் PPF கணக்கை நீங்கள் திறக்கலாம். எப்படி அஞ்சல் அலுவலகத்தில் உங்கள் PPF கணக்கை தொடங்குவது என்று இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.தகுதிகள் ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், சுய வேலைவாய்ப்பு அல்லது வேறு எந்த பிரிவாக இருந்தாலும் PPF கணக்கிற்கு தபால் நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்ஒரு கணக்கு மட்டுமே ஒருவர், ஒரு PPF கணக்கை மட்டுமே வைத்திருக்க முடியும். நீங்கள் இரண்டு கணக்குகளைத் திறந்துவிட்டால், அது இரண்டாவது கணக்கை மூடுவதற்கு வழிவகுக்கும், மற்றும் முக்கிய தொகை மட்டும்தான் திரும்பித்தரப்படும் அதற்க்கு வட்டி திரும்ப தரப்படாது.மைனர்களுக்கு கணக்கு சிறுவர்களுக்கும் PPF கணக்கை திறக்க முடியும். தந்தை அல்லது தாயார் அவர்கள் சார்பாக கணக்கு திறக்க முடியும். தந்தை மற்றும் தாய் இருவரும் ஒரே சிறுவருக்கு கணக்கைத் திறக்க முடியாது, அவர்களில் ஒருவர் மட்டுமே ஈடுபட வேண்டும். பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, இந்த கணக்கைத் தொடர முடியாது, டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை அவர்களுக்கு திருப்பிச் செலுத்தபடும்.என்ஆர்ஐ என்ஆர்ஐ-கள் (NRI) ஒரு PPF கணக்கைக் திறக்க முடியாது. இந்தியாவில் வசிக்கும் ஒருவர் PPF கணக்கு வைத்திருந்தால், பின்னர் அவர்கள் ஒரு NRI ஆனால் அவர் 15 ஆண்டுகள் மட்டுமே கணக்கு தொடரலாம்.தேவையான ஆவணங்கள் PPF கணக்கை திறப்பதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன. நீங்கள் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு PPF கணக்கை தொடங்குவதற்க்கு தேவையான ஆவணங்கள் பட்டியல் இங்கே. சமீபத்தில் எடுக்கபட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் முகவரி சான்று அடையாள சான்று பான் அட்டை வைப்பு தொகை (குறைந்தபட்சம் ரூ .100) அஞ்சல் அலுவலகத்தில் PPF திறப்பதற்கு ஒரு சில முன்நிபந்தனைகள் மட்டுமே உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியது எல்லா உங்கள் அருகில் உள்ள ஏதேனும் ஒரு அஞ்சல் அலுவலகத்திர்க்கு சென்று சம்பந்தப்பட்ட அலுவலரை சந்திக்க வேண்டும்.செயல்முறை: அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை அல்லது துணை அஞ்சல் அலுவலகத்தை கண்டுபிடித்து அங்கே போகவேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து PPFகணக்கு ஆரம்பிக்க தேவையான படிவத்தை பூர்த்தி செய்யவும். நீங்கள் இணையத்திலிருந்து படிவத்தை டவுன்லோட் செய்யலாம். படிவத்தில் வழங்கப்பட்ட இடத்தில் உங்கள் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டி அதனுடன் கையெழுத்திடுங்கள். அவசியமான ஆவணத்தின் புகைப்பட நகலை படிவத்துடன் சேர்த்து, உங்கள் வைப்புத் தொகையுடன் தபால் அலுவலக நிர்வாகிக்கு சமர்ப்பிக்கவும்.வட்டி விகிதம் 1.04.2018 முதல், PPF கணக்கின் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 7.6% (கூட்டு ஆண்டுக்கு) ஆகும். தொடக்கக் கணக்குக்கான குறைந்தபட்ச தொகை ரூ. 100 ஆகும். குறைந்தபட்சம் ரூ 500 மற்றும் ரூ .150,000 ஆகியவை நிதி ஆண்டில் அதிகபட்சமாக டெபாசிட் செய்யப்படலாம்.வழிமுறைகள் ஒரு நபருக்கு ஒரு PPF கணக்கை தனது பெயரில் திறக்க முடியும். PPF கூட்டுக் கணக்கு துவங்குவதற்க்கு எந்தவிதமான வாய்ப்பு இல்லை. கணக்கு வைத்திருப்பவர் PPF கணக்கிற்காக nomineeகளை நியமிக்கலாம். PPF கணக்கிற்கு அதிகபட்சமாக நான்கு பேர் நியமிக்கப்படலாம். பிபிஎஃப் கணக்கிற்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். கணக்கு வைத்திருப்பவர் கணக்கின் காலவரை நீட்டிக்க விரும்பினால், அவர் அதை நீட்டிக்க முடியும். இந்த கால நீடிப்பு 5 ஆண்டுகள். 7 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் PPF கணக்கை திரும்பப் பெற முடியாது. PPF கணக்கு வைத்திருப்பவர்கள் 3வது ஆண்டின் தொடக்கத்தில் PPF க்கு எதிராக கடன் பெறலாம்.பொறுப்பாகாமை IT சட்டம் 80Cஇன் படி தபால் அலுவலகங்களில் PPF வைப்புத்தொகை வருமானத்தில் இருந்து குறைப்பதற்க்கு வாய்ப்பு உள்ளது . தபால் அலுவலகத்தில் PPF கணக்கைத் திறக்க விரும்பாத ஒருவர் SBI, PNB, HDFC போன்ற முன்னணி வங்கிகளில் ஒரு கணக்கைப் பெற முடியும்.x
x
x

Friday, 4 May 2018



சொத்து ஆவணங்களை பதிவு செய்யும்போது பான் எண்ணை சரியாக குறிப்பிட வேண்டும் என்று பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அசையா சொத்தின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்குமேல் இருப்பின், விற்பவர்களும் வாங்குபவர்களும் தங்களின் ஆவணத்தில் நிரந்தர வருமான கணக்கு எண் (பான்) குறிப்பிட வேண்டும். அந்த பான் எண்ணை சரிபார்க்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான் எண் இல்லாதவர்கள் படிவம் 60-ஐ கொடுக்க வேண்டும். அதில் விவசாயம் அல்லாத ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக பெறுபவர்கள் பான் விண்ணப்பித்ததற்கான ஒப்புதல் எண்ணை அளிக்க வேண்டும். மேலும், தனி நபர் அல்லாத நிறுவனம், கம்பெனி போன்றவற்றுக்கு பான் எண் மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.இதுவரை பான் எண்ணை அளித்தால் அதற்கான அட்டையை மட்டுமே அலுவலர்கள் சரிபார்க்க முடியும். அதன் உண்மைத் தன்மையை அறிய முடியாது. ஆனால், தற்போதைய ஸ்டார் 2.0 திட்டத்தில், பான் அட்டையின் உண்மைத் தன்மையை இணையதளம் வழியாக சரிபார்க்க வசதி செய்யப் பட்டுள்ளது.
ஸ்டார் 2.0 மென்பொருளில், ஆவணங்களை உருவாக்கும்போதும் பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் ஆவண சுருக்கத்தை பதிவு செய்யும்போதும் பான் எண்ணை பதிவு செய்ததும், அந்த விவரங்கள் என்எஸ்டிஎல் தரவுடன் இணைதள வழியாக நேரடியாக சரி பார்க்கப்படும். அப்போது பான் எண் பொருந்தாவிட்டால், விவரம் மென்பொருள் வழியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். அதை சரி செய்து, ஆவணப்பதிவை தொடரலாம்.
எனவே பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்களிடம் பான் எண்ணை சரியாக பதிவு செய்ய பதிவு அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். ஒருவேளை பான் எண் வேறு நபருடையது என்பது உறுதி செய்யப்பட்டால், ஆவணம் பதிவு செய்யப்படாமல் சரியான பான் எண்ணை ஆவணத்தில் குறிப்பிடக் கோரி திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிம் கார்டு வாங்க ஆதார் தேவை இல்லை - மத்திய அரசு



புதிய சிம் கார்டுகளை வாங்க இனி ஆதார்அடையாள அட்டையை கட்டாயம் வழங்கவேண்டிய அவசியம் இல்லை என மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது

மத்திய மாநில அரசுகளின் சலுகைகளை பெறவும் அரசின் பல்வேறு பயன்பாடுகளுக்கும் ஆதார் கட்டாயம் என்ற விதியை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இதில் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைப்பது அவசியம் என  தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வற்புறுத்தி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனையடுத்து சிம்கார்டு வழங்குவதற்கான முறைகளில், ஆதார் எண் தேவை இல்லை என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்கவும்  தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி செல்போன் சிம்கார்டுக்காக ஆதார் அட்டையை வாடிக்கையாளர்களிடம் கட்டாயபடுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் கார்டு அளிக்காவிட்டாலும் சிம்கார்டு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.